2024 ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் குதிக்கும் புடின்! வெளியான தகவல்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் புடின் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான மோதல் 22வது மாதமாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் மேல் சபை கூட்டமைப்பு கவுன்சில் அடுத்த ஆண்டு மார்ச் 17ஆம் திகதியை ஜனாதிபதி தேர்தலுக்கான நாளாக ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.
இது தொடர்பிலான பிரச்சாரம் திறம்பட துவங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் புதிய ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலும் வாக்களிப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் விளாடிமிர் புடின் (Vladimir Putin) போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Getty Images
71 வயதாகும் புடின் 2000ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியில் இருக்கிறார். அவர் 2020ஆம் ஆண்டில் அரசியலயமைப்பு திருத்தங்கள் மூலம் தனது பதவிக் கால அளவினை நீட்டித்தார்.
புடின் தனது அரசியல் களம் குறித்து இராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் Artyom Zhoga-யிடம் கூறியதாக RIA Novosti எனும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |