பயங்கரவாதிகளால் விராட் கோலி உயிருக்கு ஆபத்தா? குஜராத் பொலிஸார் எச்சரிக்கை
பயங்கரவாதிகளால் விராட் கோலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. RCB மற்றும் RR இதில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஆனால் இப்போட்டிக்கான பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் விராட் கோலியின் உயிருக்கு பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாகவும் குஜராத் பொலிஸார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக, வங்கமொழி நாளிதழான Anandabazar Patrika செய்து வெளியிட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி அகமதாபாத் விமான நிலையத்தில், பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 4 பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் கைது செய்தனர்.
அவர்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கோலி குறித்து வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |