உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர்
இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்காளதேச அணியை தொடரில் இருந்து நீக்க ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் ஐசிசி தொடர்
பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கிண்ணத் தொடரில் விளையாட வங்காளதேச அணி மறுத்து வருகிறது.
AP
இதன் காரணமாக, அந்த அணியை தொடரில் இருந்து நீக்க ஐசிசி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுவதால், 20 அணிகள் பங்கேற்கும் ஐசிசி தொடரில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்தை வங்காளதேசம் எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில், வங்காளதேச அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி பாகிஸ்தான் அணியும் தொடரில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் வீரரான ரஷித் லத்தீஃப் (Rashid Latif), தற்போதுள்ள கிரிக்கெட் ஒழுங்கை சவால் செய்வதற்கு இது ஒரு நல்ல நேரம் என்பதால், ஆடவர் போட்டியில் இருந்து விலகுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
TheRealPCBmedia/X
வங்காளதேசத்துடன் நிற்கிறோம்
யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், "பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான போட்டி நடைபெறவில்லை என்றால் , உங்கள் உலகக்கிண்ணத்தின் 50 சதவீதம் முடிந்துவிட்டது என்று அர்த்தம். நாங்கள் வங்காளதேசத்துடன் நிற்கிறோம் என்று கூறி, டி20 உலகக்கிண்ணத்தில் விளையாட பாகிஸ்தான் மறுக்க வேண்டும். இது ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதை செய்வதற்கு ஒரு உறுதியான இதயம் தேவை" என்று கூறினார்.
மேலும் அவர், வங்காளதேசத்தின் கோரிக்கையை ஏற்காததற்காக ஐசிசியையும் லத்தீஃப் விமர்சித்ததுடன், இலங்கைக்கு போட்டிகளை மாற்றியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்காளதேச அணியை தொடரில் இருந்து நீக்க ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
AFP/X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |