ரிஷாப் பண்ட்டை நியமிக்க விரும்பிய கவுதம் கம்பீர்: கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ? வெளியான தகவல்
சாம்பியன் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியை தெரிவு செய்வதில், கம்பீரின் கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
துணைத் தலைவர்
பிப்ரவரி மாதம் நடக்க உள்ள சாம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோஹித் ஷர்மா அணித் தலைவராகவும், சுப்மன் கில் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி பகல் 12.30 மணிக்கு வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அணித்தேர்வுக்கான ஆலோசனை கூட்டம் நீண்ட நேரம் நடைபெற்றதால், வீரர்களின் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யாவை அணியின் துணைத் தலைவராக நியமிக்க கோரிக்கை வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கோரிக்கை நிராகரிப்பு
அதேபோல் அணியில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை நியமிக்கவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் ரோஹித்தும், அஜித் அகர்கரும் துணைத் தலைவராக சுப்மன் கில்லை நியமிக்க விரும்பியதால், நீண்ட ஆலோசனைக்கு பிறகு அவர் அறிவிக்கப்பட்டார்.
மேலும் தேர்வுக்குழுவும், ரோஹித்தும் சேர்ந்து ரிஷாப் பண்டை தெரிவு செய்துள்ளனர். இதன் காரணமாகவே அணியை அறிவிப்பதில் நீண்ட நேரம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |