இனி பேசவோ, நடக்கவோ முடியாது: மோசமடைந்த ஹாலிவுட் ஜாம்பவானின் உடல்நிலை..ரசிகர்கள் வேதனை
பிரபல ஹாலிவுட் நடிக்க புரூஸ் வில்லிஸின் உடல்நிலை அரிய வகை நோய் பாதிப்பால் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புரூஸ் வில்லிஸ்
டை ஹார்டு பட சீரிஸின் மூலம் ஹாலிவுட்டின் ஆக்ஷன் ஹீரோவாக பிரபலமானவர் புரூஸ் வில்லிஸ் (Bruce Willis).
ஜேர்மனியில் பிறந்த இவருக்கு தற்போது 70 வயதாகிறது.
பிரபல நடிகை டெமி மூரை திருமணம் செய்த இவர், 2000ஆம் ஆண்டில் அவரை பிரிந்த பின் எம்மா ஹெமிங் என்பவரை மணந்தார்.
இவருக்கு Frontotemporal Dementia என்ற அரிய வகை நோய் கண்டுபிடிக்கப்பட்டது. இது மூளையை பாதிக்கும் என்பதால் நடத்தை, மொழியில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
உடல்நிலை
இந்த நோயுடன் புரூஸ் வில்லிஸ் தொடர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், நோயின் தீவிரம் அதிகரித்ததால் அவரது உடல்நிலை மோசமாகியுள்ளது.
அதாவது புரூஸ் வில்லிஸினால் இனி பேசவோ, வாசிக்கவோ, நடக்கவோ முடியாது என அறிக்கைகள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னர் அறிவிக்கப்பட்டதை விட வில்லிஸின் உடல்நிலை மேலும் மோசமடைந்து வருவதற்கான சமீபத்திய அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றாலும், ரசிகர்களுக்கு இந்த செய்திகள் வேதனையை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், புரூஸ் வில்லிஸ் சில மோட்டார் சிக்கல்களை எதிர்கொள்வதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |