20 போட்டிகளில் 15 கோல்கள்! நட்சத்திர வீரர் இழுக்க போட்டியிட்ட கிளப்கள்..அவர் கொடுத்த ட்விஸ்ட்
இங்கிலாந்து கேப்டன் ஹரி கேனை தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்ய மான்செஸ்டர் யுனைடெட், பாயர்ன் முனிச் அணிகள் போட்டியிடும் நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
முடிவுக்கு வரும் ஒப்பந்தம்
டோட்டன்ஹாம் கிளப் அணிக்காக விளையாடி வரும் ஹாரி கேன், PL-யின் இந்த சீசனில் 15 கோல்கள் அடித்துள்ளார்.
அவரது அணி புள்ளிப் பட்டியலில் முன்னேற தடுமாறினாலும், ஹரியின் ஆட்டம் முன்னணி அணிகளை கவர்ந்துள்ளது. இதனால் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பாயர்ன் முனிச் ஹரி கேனை ஒப்பந்தம் செய்ய போட்டியிடுகின்றன.
ஹரியின் டோட்டன்ஹாம் அணியுடனான ஒப்பந்தம் இந்த கோடையுடன் முடிவடைவதால் குறித்த அணிகள் அவசரம் காட்டுகின்றன.
ஹரி கேனின் முடிவு
இந்த நிலையில் ஹரி கேனின் எதிர்கால பரிமாற்றம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செய்தி வெளியாகியுள்ளது.
ஹரியின் ஒப்பந்தம் 2024யில் காலாவதி ஆகும் நிலையில், அவர் டோட்டன்ஹாம் அணியின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
@Getty Images
டோட்டன்ஹாம் அணிக்கு கோப்பைகளை வென்று கொடுக்க வேண்டும் என்று அவர் நினைப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
29 வயதாகும் ஹரி கேன் டோட்டன்ஹாம் அணிக்காக 198 கோல்களும், இங்கிலாந்து அணிக்காக 53 கோல்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@ Paul Harding/Getty Images