பாகிஸ்தான்-அமீரகம் இல்லை இலங்கையில் தான்: இழுபறிக்கிடையில் வெளியான தகவல்
ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆசியக்கோப்பை
செப்டம்பர் மாதம் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் இதில் விளையாட உள்ளன.
பாகிஸ்தானில் இந்த போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய அணி அங்கு செல்லாது என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் எங்கு நடத்தப்படும் என்ற குழப்பம் நிலவியது.
இலங்கையில் போட்டிகள்
அதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணிக்கான லீக் போட்டிகள் மட்டும் நடைபெறும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் இலங்கையின் காலே மற்றும் பல்லேகேலேவில் நடைபெறும் எனும் செய்தி வெளியாகியுள்ளது. ACC நிர்வாகக்குழு உறுப்பினர் ஒருவர் இதனைக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.