நித்தியானந்தாவின் 4000 கோடி சொத்து யாருக்கு? தீயாய் பரவும் தகவல்
சர்ச்சை சாமியாரான நித்தியானந்தாவின் சொத்து குறித்த தகவல் பரவி வருகிறது.
உயிர்த்தியாகம் செய்துவிட்டாரா?
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தா கைலாசா எனும் நாட்டை உருவாக்கி வசிப்பதாக பரபரப்பை கிளப்பினார்.
அந்நாடு எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு பதில் இல்லாத நிலையில், நித்தியானந்தாவின் சகோதாரி மகன் சுந்தரேஷ்வரன் வெளியிட்ட வீடியோவில் அவர் இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
நித்தியானந்தா உயிர்த்தியாகம் செய்துவிட்டதாக கூறியது வைரலாக பரவி வரும் நிலையில், நித்தியானந்தாவின் சொத்து குறித்த தகவல்களும் பரவுகின்றன.
4,000 கோடி சொத்து
நித்தியானந்தாவுக்கு ரூ.4,000 கோடி சொத்து உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அவர் இறந்துவிட்டால் அந்த சொத்து யாருக்கு சேரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிலர் நடிகை ரஞ்சிதாவுக்குதான் சொத்து மொத்தமும் போய்சேரும் என்று கூறுகிறார்கள்.
இதற்கிடையில், இன்று ஏப்ரல் 1ஆம் திகதி என்பதால் நித்தியானந்தா இறந்துவிட்டது உண்மையா? அல்லது அவர் வழக்குகளில் இருந்து தப்பிக்க இவ்வாறு செய்திகளை பரப்புகிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |