இஸ்ரேலில் பாலஸ்தீனியரின் கத்திக்குத்து சம்பவம்! இருவர் மரணம்..பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு
இஸ்ரேலில் பாலஸ்தீனியர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
கத்திக்குத்து தாக்குதல்
டெல் அவிவின் தெற்கு புறநகர்ப் பகுதியான ஹோலோனின் பல இடங்களில் ''பயங்கரவாதத் தாக்குதல்'' நடந்ததாக தெரிய வந்துள்ளது.
Magen David Adom அவசர சேவை இதனை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன தாக்குதல்தாரி ஒருவர் நடத்திய இந்த கத்திக்குத்து தாக்குதலில் 66 வயது பெண் மற்றும் 80 வயதுடைய ஆண் என இருவரும் படுகாயமடைந்தனர்.
ஆனால் அவர்கள் இருவரும் சிறிது நேரத்திலேயே காயங்களால் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனியர்
மேலும், காயமடைந்த இருவரில் 68 வயது நபரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், 26 வயது நபர் மிதமான காயத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் மேற்குக் கரை பாலஸ்தீனியர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், Magen David Adom ஆம்புலன்ஸ் சேவை மருத்துவர்கள், "இது ஒரு சிக்கலான மற்றும் கடினமான பயங்கரவாத தாக்குதல். உயிரிழப்புகள் மூன்று தனித்தனி இடங்களில், சுமார் 500 மீற்றர் தொலைவில் இருந்தன'' என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |