கவலையில் இருக்கும் விளாடிமிர் புடின்: காரணம் இதுதான்
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது நாட்டின் பொருளாதார தாக்கம் குறித்து கவலையடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகளுடனான சந்திப்பு
2022யில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியபோது, அந்நாட்டை குறைபாடு செய்தல் மற்றும் இராணுவமயமாக்குதல் என்ற இலக்குகளை புடின் வைத்திருந்தார்.
ஆனால், உக்ரைன் படைகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து ரஷ்யா, நாட்டின் தென்கிழக்கு பகுதிகளைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்தியது.
இந்த நிலையில் புடின் உயர் பொருளாதார அதிகாரிகளுடனான சமீபத்திய சந்திப்பின்போது, வெளிப்படையாக ரஷ்யா குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தனது முக்கிய நோக்கங்களை அடைந்துவிட்டதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) நம்புகிறார். ஆனால், அவர் நாட்டில் பொருளாதார தாக்கம் குறித்து கவலைகொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார கவலைகள்
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிக கடன் வாங்கும் செலவுகள், ஒரே நேரத்தில் தனியார் முதலீட்டைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக அவர் நினைக்கிறாராம்.
இதனால், ரஷ்யாவின் உயரடுக்கின் சில உறுப்பினர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்போதைய மோதலுக்கு ஒரு தீர்வை நோக்கி பேச்சுவார்த்தை நடத்த வாதிட தூண்டியதாக கூறப்படுகிறது.
ராய்ட்டர்ஸ் அறிக்கை குறித்து கிரெம்ளின் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும் புடினின் பொருளாதார கவலைகள் உக்ரைனில் இருந்து துருப்புகளை திரும்பப் பெறுவதற்கான எந்தவொரு முடிவையும் பாதிக்குமா என்பதும் தெளிவாக தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |