நாடொன்றில் இருந்து திடீரென படைகளை திரும்பப்பெறும் ரஷ்யா
வடகிழக்கு சிரியாவில் உள்ள படைகளை ரஷ்யா திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.
ரஷ்யப் படைகள்
2019ஆம் ஆண்டு முதல் ரஷ்யப் படைகள், குர்திஷ் பிராந்தியத்தின் தலைநகரில் உள்ள காமிஷ்லி விமான நிலையத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தன.
Reuters
இது ஒரு புறக்காவல் நிலையமாகவும், படைகளின் நகர்வுகளுக்கான தளவாட மையமாகவும் வடகிழக்கு சிரியாவைக் கண்காணிக்க செயல்பட்டது.
இந்த நிலையில், ரஷ்யா தனது படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாக சிரிய ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு திரும்புவார்கள்
சமீபத்திய நாட்களில் இராணுவ உபகரணங்கள் மற்றும் கனரக ஆயுதங்கள், சிரியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ரஷ்யாவின் Khmeimim விமானப்படைத் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Reuters
எனினும், ரஷ்யப் படையின் ஒரு பகுதி Khmeimim தளத்திற்கு செல்லும் என்றும், மற்றவர்கள் ரஷ்யாவிற்கு திரும்புவார்கள் என்றும் ஊடகத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
சிரிய அரசாங்கப் படைகளின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த திரும்பப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Reuters
Video Screenshot
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |