எலோன் மஸ்க் மேல் உள்ள கோபத்தால் டெஸ்லா காரை விற்கும் ட்ரம்ப்? பரவும் தகவல்
உலகப் பணக்காரர் எலோன் மஸ்க் உடனான மோதலால், டெஸ்லா காரை டொனால்ட் ட்ரம்ப் விற்க பரிசீலிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
டெஸ்லாவின் பங்கு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான மோதல் காரணமாக, எலோன் மஸ்க்கின் டெஸ்லாவின் பங்கு 14 சதவீதம் கூர்மையான சரிவை சந்தித்தது. இது 100 பில்லியன் சந்தை மதிப்பை அழித்துவிட்டது.
இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் இந்த ஆண்டு தொடக்கத்தில் வாங்கிய தனது டெஸ்லா காரை விற்கவோ அல்லது கொடுக்கவோ பரிசீலித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
ட்ரம்ப்பின் முடிவு
மஸ்க் உடனான பிளவிற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை மாளிகை மைதானத்தில் 80,000 டொலர்கள் மதிப்புள்ள இந்த சிவப்பு டெஸ்லா கார் நிறுத்தப்பட்டிருக்கிறது.
மூத்த அதிகாரி ஒருவர் AFP வெளியிட்டுள்ள செய்தியில், டெஸ்லா காரை விற்க தீவிரமாக யோசித்து வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |