ஜேர்மனி குறித்து ரஷ்யா, அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை: வெளியான தகவல்
Nord Stream 2 குழாய்வழியை மீண்டும் தொடங்குவது குறித்து ரஷ்யாவும், அமெரிக்காவும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜேர்மனிக்கு எரிவாயு
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Nord Stream 2யின் ஆபரேட்டர் மற்றும் 11 மில்லியன் டொலர்கள் குழாய்வழியுடன் தொடர்புடைய ரஷ்யாவை தளமாகக் கொண்ட பிற நிறுவனங்கள், தற்போது அமெரிக்கத் தடைகளின் கீழ் உள்ளன.
இந்த நிலையில், ரஷ்யா மற்றும் அமெரிக்கா Nord Stream 2 குழாய்வழி வழியாக ஜேர்மனிக்கு எரிவாயு ஓட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்து, ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக இதனை நன்கு அறிந்த பெயர் தெரியாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஜேர்மன் டேப்ளாய்டு பில்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறப்புத் தூதர்
பில்டின் கூற்றுப்படி, ட்ரம்பின் சிறப்புத் தூதர் ரிச்சர்ட் கிரெனெல், சுவிஸ் நகரமான Steinhausenயில் உள்ள குழாய்வழியின் ஆபரேட்டரான Nord Stream 2 AGயின் தலைமையகத்திற்கு, பேச்சுவார்த்தைகளுக்காக பலமுறை அதிகாரப்பூர்வமற்ற வருகைகளை மேற்கொண்டார்.
மேலும், சுவிஸில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஜேர்மன் அரசாங்கம் பங்கேற்கவில்லை என்றும், Nord Stream 2ஐ மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தம் நிறைவேறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால், கிரெம்ளின் திங்களன்று பில்ட்டின் இந்த அறிக்கையை நிராகரித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |