ஹரி-மேகனுக்கு அமெரிக்காவில் மறுப்பு! கோரிக்கையை நிராகரித்த வெள்ளை மாளிகை
அமெரிக்காவிற்கு பைடனுடன் Air Force Oneயில் செல்ல ஹரி-மேகனுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்தாக செய்தி வெளியாகியுள்ளது.
Air Force Oneயில் பயணம்
பிரித்தானிய ராணியின் மறைவுக்கு பிறகு இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்லே, Air Force Oneயில் அமெரிக்காவுக்கு செல்ல விரும்பினர்.
இதற்காக அவர்கள் விடுத்த கோரிக்கையை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளதாக டெய்லி மெயில் ஆதாரங்கள் கூறுகிறது.
getty images
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க முதல் பெண்மணியான ஜில் பைடன், இளவரசர் ஹரியின் Invictus Games போட்டிகளில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டார். ஆனால், அவரது இருப்பு அரச குடும்பத்தை பாதிக்கும் என்று கருதப்பட்டது.
எனினும், ஜில் பைடன் Invictus Gamesயில் கலந்து கொள்ள ஹரி-மேகன் ஜோடி பல்வேறு முயற்சிகளை செய்ததாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை
இந்த நிலையில் தான் ஹரி, மேகன் தம்பதியின் ஊழியர்கள் Air Force Oneயில் அமெரிக்காவுக்கு சவாரி செய்ய முடியுமா என்று கேட்டுள்ளனர். இதற்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில், இது பிரித்தானிய அரண்மனை மற்றும் புதிய மன்னருடனான உறவை சீர்குலைக்கும் என்றும், சலசலப்பை ஏற்படுத்தும் என்றும் வெள்ளை மாளிகை கருதுவதாக மற்றொரு ஆதாரம் டெய்லி மெயிலிடம் தெரிவித்துள்ளது.
Wireimage
இதற்கிடையில், Air Force Oneயில் சவாரி செய்ய விரும்பும் யாரையும் பைடன் அழைக்கலாம். ஆனால், டியூக் மற்றும் டச்சஸ் விமானத்தில் பயணிக்க யார் பணம் செலுத்துவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அரசு பைடன் குடும்பம் லண்டன் உட்பட உத்தியோகபூர்வ பயணங்களுக்கு பணம் செலுத்துகிறது. ஆனால், அமெரிக்காவில் இருக்கும் ஹரி மற்றும் மேகன் அதிகாரிகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |