மதுரோவையும், அவரது மனைவியையும் அமெரிக்கா விடுவிக்க வேண்டும் - ரஷ்யா
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை விடுவிக்குமாறு ரஷ்யா அமெரிக்காவை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிக்கோலஸ் மதுரோ
அமெரிக்க இராணுவம் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) மற்றும் அவரது மனைவியை கைது செய்தது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் வளங்களுக்காக அமெரிக்கா இதனை செய்துள்ளதாக வெனிசுலா குற்றஞ்சாட்டி வருகிறது.
ஈரான், கொலம்பியா, கியூபா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
ரஷ்யா வலியுறுத்தல்
அதேபோல் ரஷ்யாவும் தனது கண்டனத்தை தெரிவித்த நிலையில், நிக்கோலஸ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியறவு அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "இந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியையும், அவரது மனைவியையும் விடுவிக்குமாறு அமெரிக்கத் தலைமைக்கு நாங்கள் உறுதியாக அழைப்பு விடுக்கிறோம்" என்று கூறியதாக தெரிய வருகிறது.
அத்துடன் இந்த கடும் மோதலை சாமர்த்தியமாக தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |