அடுத்தடுத்து தென் ஆப்பிரிக்க வீரர்களை வெளியேற்றிய ஸ்டார்க்: 6 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டல்
Mitchell starc took 6 wickets vs south africa: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கேப்டவுனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில், அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மார்க்ரம், அக்கர்மன் கூட்டணி
அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நியூலேண்ட்ஸ்லில் நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்ய, தென் ஆப்பிரிக்க அணியில் எய்டன் மார்க்ரம் மற்றும் மார்க்யூஸ் அக்கர்மன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வேகமாக ஓட்டங்கள் சேர்த்தனர். அணியின் 158 ஆக உயர்ந்தபோது இந்த கூட்டணி முறிந்தது.
சதத்தை நோக்கி பயணித்த மார்க்யூஸ் அக்கர்மன் (Marques Ackerman) 95 ஓட்டங்களில் (2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள்) லியோன் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார்.
ஸ்டார்க்கின் புயல்வேக பந்துவீச்சு
பின்னர் வந்த டேவிட் பெடிங்கம் நிதானமாக ஆட, மார்க்ரம் 78 ஓட்டங்களில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் பவுமா டக்அவுட் ஆக, ப்ரீட்ஸ்கி 2 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அரைசதம் அடித்த பெடிங்கமை 50 ஓட்டங்களில் ஸ்டார்க் வெளியேற்ற, சீட்டுக்கட்டுபோல் அடுத்தடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் சரிந்தது.
முல்டர் (0), ரிக்கெல்டன் (42), ஜென்ஸன் (52), கோட்ஸி (0), ரபாடா (0) ஆகியோர் ஸ்டார்க்கின் புயல்வேக பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா 329 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளும், நேதன் லியோன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
