413 ஓட்டங்கள் வித்தியாசத்தில்..வங்காளதேச ஏ அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க ஏ அணி
South africa A team won by innings and 413 runs: வங்காளதேச ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிரிட்டோரியாவில் நடந்த முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேச ஏ அணியை வீழ்த்தியது.
தென் ஆப்பிரிக்க ஏ அணி 647 ஓட்டங்கள்
தென் ஆப்பிரிக்கா ஏ மற்றும் வங்காளதேச ஏ அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்டோரியா நடந்தது.

வங்காளதேச ஏ அணி முதல் இன்னிங்ஸில் 122 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, தென் ஆப்பிரிக்க ஏ அணி 647 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அணித்தலைவர் மார்க்கியூஸ் அக்கர்மன் 256 ஓட்டங்களும், சினேதேம்பா கிஷிலே 200 ஓட்டங்களும் விளாசினர்.
இமாலய வெற்றி
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்காளதேச அணி 112 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நைம் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
கோடி யூசுஃப், ஷெபோ மற்றும் டெலனோ தலா 3 விக்கெட்டுகளும், ஜெரால்டு ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |