சதத்தை தவறவிட்ட வீரர்: கொழும்பில் போராடும் இலங்கை அணி
இலங்கையின் பசிந்து சூரியபண்டார கொழும்பு டெஸ்டில் 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையின் பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஃபாலோ-ஆன்
கொழும்பில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஃபாலோ-ஆன் ஆனது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் லஹிரு உதார 3 ஓட்டங்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கமில் மிஷாரா 32 ஓட்டங்களில் வெளியேற, பசிந்து சூரியபண்டார (Pasindu Sooriyabandara) மற்றும் கமிந்து மெண்டிஸ் இருவரும் வலுவான கூட்டணி அமைத்தனர்.
இவர்களின் கூட்டணி 115 ஓட்டங்கள் குவிக்க, கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) 55 ஓட்டங்களில் (3 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார்.
ரிஷாப் பண்ட்டினால் ஸ்டம்பிங்
அடுத்து தனஞ்செய டி சில்வா 23 ஓட்டங்களிலும் மானவ் சுதர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பசிந்து சூரியபண்டார சதத்தை நோக்கி பயணித்தார். ஆனால், அவர் 92 ஓட்டங்களில் இருந்தபோது மானவ் சுதர் பந்துவீச்சில் ரிஷாப் பண்ட்டினால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
அதன் பின்னர் களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்லவை 6 ஓட்டங்களில் சரன்ஷ் ஜெயின் வெளியேற்ற, இலங்கை அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
மேலும் 16 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. மானவ் சுதர் 2 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா, மொஹம்மது சிராஜ், சரன்ஷ் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |