பந்துவீசி 49 ரன், பேட்டிங்கில் 6 ரன்..சொதப்பிய ஜிம்மி நீஷம்: கேப்டனாக முதல் போட்டியே தோல்வி
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொன்னர் எஸ்டர்ஹுய்சென் அதிரடி
தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் மோதிய 4வது டி20 போட்டி ஸ்கை மைதானத்தில் நடந்தது.
முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் வியான் முல்டர் டக்அவுட் ஆக, கொன்னர் எஸ்டர்ஹுய்சென் அதிரடியில் மிரட்டினார். அவர் 36 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் விளாசினார்.

டோனி டி ஸோர்சி 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, ரூபின் ஹெர்மான் 28 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா 164 ஓட்டங்கள் குவித்தது. கைல் ஜேமிசன் 2 விக்கெட்டுகளும், பௌக்ஸ், சீர்ஸ் மற்றும் மெக்கொன்சி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கிளார்க் 9 ஓட்டங்களில் வெளியேற, டிம் ராபின்சன் 32 (22) ஓட்டங்களும், கிளெவர் 26 (16) ஓட்டங்களும் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்தனர்.

நியூஸிலாந்து ஆல்அவுட்
ஆனால் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அணிதலைவர் ஜிம்மி நீஷம் 8 பந்துகளில் 6 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

தென் ஆப்பிரிக்க அணியின் மிரட்டலான பந்துவீச்சில் நியூஸிலாந்து அணி 18.5 ஓவர்களில் 145 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கோட்ஸி 3 விக்கெட்டுகளும், ப்ரெனெலன், கேஷவ் மகாராஜ் மற்றும் பார்ட்மன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, 25ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச்சின் ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் ஜிம்மி நீஷம் முதல் முறையாக அணித்தலைவராக செயல்பட்டார். 4 ஓவர்கள் வீசிய அவர் 49 ஓட்டங்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை. அத்துடன் துடுப்பாட்டத்திலும் சொதப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |