சொந்த மண்ணிலேயே மரண அடி வாங்கிய பாகிஸ்தான்! மொத்தமாக சரித்த இருவர்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரீஸா ஹென்ரிக்ஸ் அதிரடி
ராவல்பிண்டியில் நடந்த டி20 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. 
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 194 ஓட்டங்கள் குவித்தது. ரீஸா ஹென்ரிக்ஸ் (Reeza Hendricks) 40 பந்துகளில் 60 ஓட்டங்கள் விளாசினார்.
டோனி டி ஸோர்சி 16 பந்துகளில் 33 ஓட்டங்களும், ஜார்ஜ் லிண்டே 22 பந்துகளில் 36 ஓட்டங்களும் விளாசினர். மொஹம்மது நவாஸ் 3 விக்கெட்டுகளும், சைம் அயூப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் ஆல் அவுட்
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி லிண்டே, போஷ், லிஸாத்தின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.1 ஓவர்களில் 139 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக சைம் அயூப் 37 (28) ஓட்டங்களும், மொஹம்மது நவாஸ் 36 (20) ஓட்டங்களும் எடுத்தனர். கார்பின் போஷ் (Corbin Bosch) 4 விக்கெட்டுகளும், ஜார்ஜ் லிண்டே (George Linde) 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |