T20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக மாபெரும் சாதனையை படைத்த தென் ஆப்பிரிக்கா
T20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா வெற்றி
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையேயான 2வது T20 போட்டி நேற்று நியூ சண்டிகரில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213, ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக குயின்டன் டி காக், 90 ஓட்டங்கள் எடுத்தார்.

214 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 19.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 162 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 62 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் மூலம், தென் ஆப்பிரிக்க அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிக முறை வென்ற அணி
இதன் மூலம், இந்தியாவை சொந்த மண்ணில் T20 போட்டிகளில் 50+ ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற பெருமையை தென் ஆப்பிரிக்கா பெற்றுள்ளது.

மேலும், இந்தியாவை T20 போட்டிகளில் அதிக முறை வென்ற அணி என்ற பெருமையையும் தென் ஆப்பிரிக்கா படைத்துள்ளது.
இதுவரை இரு நாடுகளும் 33 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், இதில் 13 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

37 போட்டிகளில் விளையாடி 12 வெற்றிகளுடன் அவுஸ்திரேலியா 2வது இடத்திலும், 29 போட்டிகளில் விளையாடி 12 வெற்றிகளுடன் இங்கிலாந்து 3வது இடத்திலும் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |