பிரித்தானியாவில் வெற்றி கொண்டாட்டம்.. கிரிக்கெட் வீரர் மீது கொடூர தாக்குதல்! கோமாவுக்கு சென்ற பரிதாபம்
பிரித்தானியாவின் கிளப் ஒன்றுக்கு வெளியே, வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமலோ, வயது 20. இவர் நார்த் பீதர்டன் கிரிக்கெட் கிளப்பில் விளையாடி வந்தார்.
இந்த நிலையில், பிரித்தானியாவின் பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு, சமீபத்தில் முடிந்த போட்டியில் வெற்றி பெற்றதற்காக வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென குமலோவை தாக்கியதில், சம்பவ இடத்தியிலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமலோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும், தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும் பிரபல கிரிக்கெட் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 27 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குமலோ குறித்து நார்த் பீதர்டன் கிரிக்கெட் கிளப் வெளியிட்டுள்ள செய்தியில், 'முழுமையாகவும், விரைவாகவும் குணமடைய மொண்ட்லிக்கு நாங்கள் எங்கள் இதயப்பூர்வமான ஆதரவை வழங்குகிறோம். அவருக்கு உதவியவர்களுக்கு, குறிப்பாக சம்பவ இடத்திலும், மருத்துவமனையிலும் அவருக்கு உதவிய மற்றும் உதவி வரும் சுகாதார சேவை ஊழியர்களுக்கு எங்கள் நன்றி' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குமலோவின் ஏஜென்ட் Rob Humphries கூறுகையில், 'மாண்ட்லி மிகவும் மென்மையான மனிதர். அவருக்கு எப்படி இப்படி நடந்தது என்று அவரது அம்மாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. நார்த் பீதர்தானில் உள்ள அனைவரும் அவரை வணங்குகிறார்கள்.
அவர் ஒரு உண்மையான அழகான குழந்தை. அவர் இங்கே மிகவும் நல்ல நேரத்தைக் கொண்டிருந்தார். நன்றாக பந்துவீசிய அவர், கிளப்பின் அற்புதமான அங்கமாகிவிட்டார்' என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
Photo Credit: Twitter
இதற்கிடையில், குமலோவின் தாயார் பிரித்தானியாவுக்கு செல்ல Humphries ஏற்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மாண்ட்லி குமலோ, 2020 ஆம் ஆண்டு நடந்த இளையோர் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.