முத்தரப்பு இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வேயை அலறவிட்ட ஹெர்மன், பிரேவிஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா 205 ஓட்டங்கள் குவித்தது.
நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 205 ஓட்டங்கள் குவித்தது.
ஜோர்டன் ஹெர்மன் அரைசதம்
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி, நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் கோன்னோர் எஸ்டர்ஹுய்சென் (Connor Esterhuizen) 23 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய டெவல்ட் பிரேவிஸ் (Dewald Brevis) தொடக்க வீரர் ஜோர்டன் ஹெர்மனுடன் (Jordan Hermann) கைகோர்த்து ஜிம்பாப்வே பந்துவீச்சை நொறுக்கினார்.
பிரேவிஸ், ஜென்சன்
அரைசதம் விளாசிய ஜோர்டன் ஹெர்மன் 29 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரேவிஸ் 32 (23) ஓட்டங்களில் இருந்தபோது பிராட் எவன்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ஸோர்சி 17 ஓட்டங்களிலும், ரூபின் ஹெர்மன் 16 பந்துகளில் 27 ஓட்டங்களும் விளாசினர்.
டுயன் ஜென்சன் ஆட்டமிழக்காமல் 14 பந்துகளில் 23 ஓட்டங்கள் விளாச, தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் குவித்தது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |