Omicron தொடர்பில் தென் ஆப்பிரிக்கா வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!
கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை Omicron வைரஸ் தொடர்பில் தென் ஆப்பிரிக்கா வெளியிட்டுள்ள செய்தி மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
சீனாவில் உள்ள வூஹான் நகரில் தோன்றிய கொரோனா இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனாவில் இருந்து Omicron என்கின்ற புதிய வைரஸ் உருமாறியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா நாட்டில் தான் முதலில் கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது பல்வேறு உலக நாடுளை அச்சுறுத்தி வருகின்றது. இதையொட்டி உலகெங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தென் ஆப்ரிக்க நாட்டின் தொற்று நோய்கள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், Omicron வைரசால் பாதிக்கப்படும் தென் ஆப்பிரிக்கர்களில் 80% பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படாது.
இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலுக்கு வரும் நோயாளிகளுக்கு மற்ற திரிபுகளால் ஏற்படும் ஆபத்திற்கு இணையான ஆபத்தும் அச்சுறுத்தலும் இருக்கும்.
Omicron கண்டறியப்பட்டதில் இருந்து பரவல் மிக மிக அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் டெல்டாவுடன் ஒப்பிடும்போது Omicron வைரஸால் பாதிப்பு 80%க்கும் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.