ஜோர்டான் ஹெர்மன் மிரட்டல் ஆட்டம்: நமீபியாவை ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா
South africa whitewash namibia in odi series: நமீபியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி முழுமையாக கைப்பற்றியது.
நமீபியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.
சுருண்ட நமீபியா
Windhoek-யில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நமீபியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

முதலில் ஆடிய நமீபியா அணி 156 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சனே க்ரீன் 33 ஓட்டங்கள் எடுத்தார். பிஜோர்ன் போர்டுன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 21.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஹெர்மன்
ஜோர்டான் ஹெர்மன் (Jordan Hermann) 59 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் விளாசினார். கோன்னோர் எஸ்டர்ஹுய்ஸன் 68 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 3-0 என்ற கணக்கில் நமீபியாவை ஒயிட்வாஷ் செய்தது.
தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் பிஜோர்ன் போர்டுன் ஆட்டநாயகன் விருதும், ஜோர்டான் ஹெர்மன் மற்றும் ரூபென் ட்ரம்பல்மேன் இருவரும் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |