ஆப்கானுக்கு எதிராக அதிர்ச்சி திருப்பங்கள்! 2 முறை சூப்பர் ஓவர்..கடைசி பந்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டாவது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவர்
அகமதாபாத் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 187 ஓட்டங்கள் குவித்தது. ரிக்கெல்டன் 61 ஓட்டங்களும், டி காக் 59 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதால் போட்டி டை ஆனது. குர்பாஸ் 84 ஓட்டங்கள் விளாசினர். இது போட்டியை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றது.
தென் ஆப்பிரிக்கா வெற்றி
சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் 17 ஓட்டங்கள் எடுக்க, அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்காவும் 17 ஓட்டங்கள் எடுக்க மீண்டும் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது.

இந்த முறை தென் ஆப்பிரிக்கா முதலில் ஆடி 24 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் இரண்டாவது பந்தில் நபி டக்அவுட் ஆக, பின்னர் வந்த குர்பாஸ் ஹாட்ரிக் சிக் பறக்கவிட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
கடைசி பந்தில் 6 ஓட்டங்கள் தேவை என்றபோது, மஹாராஜ் அகலபந்தாக வீசினர். அடுத்த பந்தில் குர்பாஸ் அவுட் ஆனதால், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |