124 ஓட்டங்கள் இலக்கை எட்டமுடியாமல் இந்தியா தோல்வி! கலங்கிய சுந்தர்..முடித்துவைத்த மஹாராஜ்
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
124 ஓட்டங்கள் இலக்கு
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நடந்தது.
Sir Aiden Kyle Markram with the biggest wicket of the match Washington Sundar. 🥵
— ∆мαx🧋 (@MarkramBot) November 16, 2025
You can never keep him out of the game. Look at those emotions, the man plays with heart.
pic.twitter.com/35U2Dldht4
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ஓட்டங்களிலும், இந்தியா 189 ஓட்டங்களிலும் ஆல்அவுட் ஆகின.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 153 ஓட்டங்களுக்கு சுருண்டது. டெம்பா பவுமா ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 
இதனால் இந்திய அணிக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பினர்.
வாஷிங்டன் சுந்தர் மட்டும் நின்று ஆட, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகினர். 
தென் ஆப்பிரிக்கா வெற்றி
ஹார்மர் தனது சுழலில் கடும் நெருக்கடி கொடுத்தார். அணியின் ஸ்கோர் 72 ஆக இருந்தபோது வாஷிங்டன் சுந்தர் 31 ஓட்டங்களில் மார்க்ரம் ஓவரில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட அக்ஷர் பட்டேல் (Axer Patel) 26 (17) ஓட்டங்களில் கேஷவ் மஹாராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிராஜும் அதே ஓவரில் அவுட் ஆக, இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 93 என தோல்வியுற்றது.
கில் கழுத்து வலி காரணமாக களமிறங்கவில்லை.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிமோன் ஹார்மர் (Simon Harmer) 4 விக்கெட்டுகளும், ஜென்சென், மஹாராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |