FIFA உலகக்கிண்ணத்தில் விளையாடியவர் 25 வயதில் அகால மரணம்! கால்பந்து உலகம் அதிர்ச்சி
தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி வீரர் ஜேடன் ஆடம்ஸ் 25 வயதில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேடன் ஆடம்ஸ்
நடப்பு FIFA உலகக்கிண்ணப் போட்டித் தொடரில், தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடியவர் ஜேடன் ஆடம்ஸ் (Jayden Adams).

இவர் தனது 25 வயதில் திடீரென உயிரிழந்ததாக, தென் ஆப்பிரிக்க கால்பந்து வீரர்கள் சங்கம் சனிக்கிழமையன்று உறுதிப்படுத்தியது.
நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு
இதுதொடர்பான பதிவில், "ஜேடன் சமீபத்தில்தான் FIFA உலகக்கிண்ணத்தில் தென் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தினார். நாட்டின் நம்பிக்கையை பெருமை, தைரியம் மற்றும் சிறப்பான செயல்பாட்டுடன் அவர் சுமந்து நின்றார்.

அவரது மறைவு அவரது குடும்பத்தினர், சக வீரர்கள், கிளப் அணிகள், கால்பந்து சமூகம் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
ஆடம்ஸின் குடும்பத்தினர், மமெலோடி சன்டவுன்ஸ், Stellenbosch FC, Bafana Bafana மற்றும் அவரது வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |