அமெரிக்கா நிரம்பிவிட்டது! இனி புலம்பெயர்ந்தோருக்கு இடமில்லை - செனட்டர் லிண்ட்ஸே கிரஹாம்
தெற்கு எல்லையில் குடியேறுபவர்களின் தொடர்ச்சியான ஓட்டத்திற்கு அமெரிக்காவில் இனி இடமில்லை என செனட்டர் லிண்ட்ஸே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் இடம்பெயர்வு
அமெரிக்காவில் குளிர்கால மாதங்களில் தெற்கு எல்லையில் இடம்பெயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனால் டெக்ஸாஸ் நெருக்கடியின் சுமைகளைத் தாங்குவதாக கூறப்படுகிறது.
டெக்ஸாஸ் ஆளுநர் கிரேக் அபோட், ஒரு சட்டம் தொடர்பில் கையெழுத்திட்டார். இது மாநில அளவில் புலம்பெயர்ந்தோரை கைது செய்யவும், தடுத்து வைக்கவும் மற்றும் நாடு கடத்தவும் சட்ட அமலாக்கத்தை அனுமதிக்கிறது.
Adam Davis/EPA via Shutterstock
லிண்ட்ஸே கிரஹாம்
இந்த நிலையில் தெற்கு கரோலினாவின் குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்ஸே கிரஹாம், வெள்ளை மாளிகை குடியேற்ற அமைப்பு மற்றும் எல்லைக் கொள்கைகளை மாற்றியமைப்பது தொடர்பான உடன்பாட்டை எட்டினால், காங்கிரசில் உள்ள குடியரசுக் கட்சியினர் உக்ரைனுக்கு கூடுதல் உதவிகளை அனுப்ப ஒப்புக் கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர், நீங்கள் புகலிட விசாரணைக்காக நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தால் புகலிட அமைப்பை மெதுவாக்குவோம்.
1.7 மில்லியன் மக்கள் நாடு கடத்தப்படுவதற்கு தயாராக உள்ளனர். புதியவர்களை அனுமதிக்கும் முன் அவர்களை நாடு கடத்துவோம் என்றார்.
மேலும் பேசிய லிண்ட்சே கிரஹாம் (Lindsey Graham), 'அமெரிக்கா புலம்பெயர்ந்தவர்களால் நிரம்பியுள்ளது. அதிகமான புலம்பெயர்ந்தோர் வெள்ளம்போல் இருப்பதால், தெற்கு எல்லையில் தொடர்ச்சியான ஓட்டத்திற்கு இனி இடமில்லை. எனவே அங்கு நடந்து வரும் நெருக்கடியை கையாள பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அழைப்பு விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |