தென் கொரியா - சீனா இடையே 7 புதிய ஒப்பந்தம்: வலுப்பெறும் இருநாட்டு உறவு
தென் கொரியா மற்றும் சீனா இடையே 7 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தென் கொரியா - சீனா இடையே ஒப்பந்தம்
பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தென் கொரியா மற்றும் சீனா இடையே கையெழுத்தாகியுள்ளது.
கியோங்ஜூவில் நடைபெற்ற ஏபெக்(APEC) மாநாட்டில் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையிலான உயர்மட்ட சந்திப்புக்கு பிறகு இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் கொரிய வோன் மற்றும் சீன யுவான் இடையிலான நாணய மாற்று ஏற்பாடு முக்கியமான ஒன்றாகும்.
மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் வணிகம், தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான ஒத்துழைப்பும் அடித்தளமிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |