தென் கொரிய ஜனாதிபதியின் கருத்தால் எரிச்சலடைந்த இஸ்ரேல்
தனது படைகளால் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து இஸ்ரேல் மடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் குற்றம் சாட்டியுள்ளார்.
என்ன நடவடிக்கை
இஸ்ரேலிய வீரர்கள் ஒரு பாலஸ்தீனச் சிறுவனைச் சித்திரவதை செய்து, ஒரு கூரையிலிருந்து கீழே தள்ளுவதைச் சித்தரிப்பதாகக் கூறப்பட்ட ஒரு சமூக ஊடகக் காணொளி குறித்த தனது கருத்துகளின் மூலம், தென் கொரிய ஜனாதிபதி இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சகத்தை அதிருப்திக்கு உள்ளாக்கினார்.

வெள்ளிக்கிழமை தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள லீ, இது உண்மையா என்பதையும், அப்படியென்றால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
சமூடக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்ட அந்தக் காணொளியின் மூலத்தை உடனடியாக அடையாளம் காண சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றால் முடியாமல் போயுள்ளது.
ஆனால், அந்த சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்குக்கரையில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்துவிட்டதாகத் தோன்றிய ஒரு ஆணின் உடலை இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் தன் காலால் கூரையிலிருந்து கீழே தள்ளுவதை செய்தியாளர்கள் பார்த்துள்ளனர்.
2024-ல் வெள்ளை மாளிகை அந்தக் காணொளிக் காட்சிகளை மிகவும் கவலையளிப்பதாகக் குறிப்பிட்டதுடன், 1967 முதல் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரை மீதான அதன் தீவிரமடைந்து வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், இஸ்ரேலிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தது.
கடும் எதிர்வினை
இந்த நிலையில், இந்தச் சம்பவம் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு, அதற்கான தீர்வு காணப்பட்டுவிட்டதாக இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், ஜனாதிபதி லீ ஜே மியுங், ஏதோ ஒரு விசித்திரமான காரணத்திற்காக, 2024-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு செய்தியைத் தோண்டி எடுத்து, அதை ஒரு நடப்பு நிகழ்வாகத் தவறாகச் சித்தரிக்கப்பட்டதை மேற்கோள் காட்டியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் சனிக்கிழமையன்று, தனது கருத்துகளுக்கு எதிராக இஸ்ரேல் அளித்த கடும் எதிர்வினையை விவரிக்கும் ஒரு செய்தி குறித்த தனது கருத்தை முன்வைத்து, லீ சமூக ஊடகங்களில் மற்றொரு கூர்மையான பதிவை வெளியிட்டார்.
இஸ்ரேலின் மிகப்பெரிய சர்வதேச ஆதரவாளரான அமெரிக்காவின் நட்பு நாடான தென் கொரியா, மத்திய கிழக்கில் நிலவும் மோதலில் எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல், பொதுவாக ஒரு சமநிலையான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |