தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாதங்கள் சிறைத் தண்டனை விதிப்பு
தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீ ஊழல் குற்றச்சாட்டில் 20 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
சியோல் மத்திய நீதிமன்றம், அவர் Unification Church எனப்படும் மத அமைப்பிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகள் பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் ஷானல் பை, கிராஃப் நெக்லஸ் போன்ற ஆடம்பர பொருட்கள் அடங்கும்.
அவர் மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் தேர்தல் நிதி தொடரப்பில் விதிமீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தாலும், அவற்றில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
வழக்கறிஞர்கள் 15 ஆண்டுகள் தண்டனை கோரிய நிலையில், நீதிபதி வூ இன்-சங் “அதிகாரத்தை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது” எனக் கூறி 20 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கினார்.

கிம் கியோன் ஹீ, முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோல் அவர்களின் மனைவி ஆவார்.
யூன் 2024-இல் அறிவித்த இராணுவச் சட்டம் (Martial Law) தொடர்பான நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே சிறையில் உள்ளார். இந்த வழக்கு, தென் கொரிய அரசியலில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
கிம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக நிலவின. 2023-இல் வெளிவந்த “Dior Bag Scandal” அவரது கணவரின் அரசியல் ஆதரவை கடுமையாக பாதித்தது. இதனால் 2024 பொதுத் தேர்தலில் யூனின் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது.
இந்த தீர்ப்பு, தென் கொரியாவில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மத-அரசியல் தொடர்புகள் குறித்து புதிய விவாதங்களை தூண்டியுள்ளது. யூனிபிகேஷன் சர்ச் தலைவர் ஹான் ஹக்-ஜா உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
South Korea First Lady bribery case, Kim Keon Hee corruption scandal, South Korea political corruption news, Seoul court bribery verdict, Yoon Suk Yeol wife jailed, Dior bag scandal South Korea, South Korea bribery trial 2026, Korean politics latest news, South Korea ex-first lady sentenced, Unification Church bribery case