வட கொரியா மீது தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறோம்! தென் கொரியா எச்சரிக்கை
இதற்கு மேல் வட கொரியா ஏவுகணையை ஏவினால், அந்நாட்டில் உள்ள ஏவுகணை ஏவுதளம், கட்டுப்பாட்டறை மற்றும் உதவி மையங்களுக்கு எதிராக துல்லியமான தாக்குதலை நடத்தும் திறனுடன் தயார்நிலையில் இருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரிய இன்று நீண்ட தூரம் சென்ற தாக்கும் ஏவுகணையை ஏவியது அண்டை நாடுகளில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து வட கொரியாவின் செயலுக்கு எதிர்வினையாற்றும் வகையில் தென் கொரிய பல ஏவுகணைகளை ஏவியது.
இதுகுறித்து தென் கொரியா தரப்பில் கூறியதாவது, ஏவுகணைகளை ஏவியதன் மூலம் தென் கொரியா ராணுவம் உடனடி எதிர்வினையாற்றும் மற்றும் பதிலடி கொடுக்கும் திறன் மற்றும் தயார் நிலையை வெளிப்படுத்தியது.
அதுமட்டுமின்றி, எங்கள் ராணுவம் வட கொரிய ராணுவ நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இதற்கு மேல் வட கொரியா ஏவுகணையை ஏவினால், அந்நாட்டிற்கு எதிராக துல்லியமான தாக்குதலை நடத்தும் திறனுடன் தயார்நிலையில் இருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.