தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்த ஆர்வத்தில்…ஆசிரியரை 100 முறை குத்திக் கொன்ற இளம்பெண்
தென் கொரியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துவிட்டு ஆசிரியரை குத்திக் கொன்ற 23 வயது இளம் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியரை கொன்ற இளம்பெண்
தென்கொரியாவில் ஜங் யூ ஜங் என்ற இளம் பெண் கொலையை மையமாக வைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொடர்ந்து ஆர்வமாக பார்த்து வந்துள்ளார்.
கொலை மையமாக வைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்த ஆர்வத்தில், ஜங் யூ ஜங் தன்னுடைய மகளுக்கு டியூசன் எடுக்க விரும்புவதாக தெரிவித்து 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தொடர்பு கொண்டுள்ளார்.
இறுதியில் 26 வயதுடைய ஆசிரியர் ஒருவர் டியூஷன் எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளி சீருடை அணிந்து கொண்டு ஆசிரியரின் வீட்டுக்கு ஜங் யூ ஜங் சென்றுள்ளார்.
பின்னர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை 100க்கும் மேற்பட்ட முறை குத்திக் கொலை செய்துள்ளார்.
அத்துடன் ஆசிரியரின் உடல் பாகங்களை பையில் மறைத்து வைத்து வாடகை காரில் எடுத்து சென்று ஆற்றுக் கரை ஓரமாக வீசி விட்டு சென்றுள்ளார்.
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார் 23 வயதான ஜங் யூ ஜங் கைது செய்ததுடன் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.