பிரமாண்ட படை அணிவகுப்பு: மீண்டும் தலைமறைவான வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்
வட கொரியாவில் பிரமாண்ட படை அணிவகுப்பு வரும் வாரத்தில் நடைபெற இருந்த நிலையில், ஜனாதிபதி கிம் ஜாங் உன் காணாமல் போகி இருப்பது அவரது உடல்நிலை குறித்த ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
பிரமாண்ட அணிவகுப்பு
வட கொரிய தலைநகர் பியோங்யாங்-கில் இந்த வாரம் பிரமாண்ட படை அணிவகுப்பு நடைபெற இருக்கும் சூழ்நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங்-உன் ஒரு மாத காலமாக பொதுவெளியில் தோன்றவில்லை என வட கொரிய செய்தித்தாள் NKவை சுட்டிக்காட்டி Fox நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரமாண்ட அணி வகுப்பானது, வட கொரிய ராணுவம் நிறுவப்பட்ட 75வது ஆண்டு தினத்தை கொண்டாடும் வகையில் செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் அணிவகுப்பு திட்டமிடப்பட்டு இருந்தது.
Reuters
இந்த பிரமாண்ட அணி வகுப்பில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் புதிய அணு ஆயுத தொழில்நுட்பம் மற்றும் ஏவுகணை அமைப்புகளை வெளிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இவை இது அமெரிக்காவிற்கும் ஆசியாவில் அதன் நட்பு நாடுகளுக்கும் அதிகரித்து வரும் கவலையாக உள்ளது என்று Fox News தெரிவித்துள்ளது.
உடல்நிலை குறித்த ஊகம்
தேசிய ராணுவ அணிவகுப்பு திட்டமிடப்பட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில், ஜனாதிபதி கிம் ஜாங் உன் பொது வெளியில் இருந்து காணாமல் போய் இருப்பது அவரது உடல்நிலை குறித்த ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
Getty
ஜனாதிபதி கிம் ஜாங் கடந்த 2014ம் ஆண்டு கிட்டத்தட்ட 40 நாட்கள் பொது வெளியில் இருந்து காணாமல் போய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.