வெற்றிகரமாக ஏவப்பட்ட விண்வெளி ராக்கெட்: உற்சாகத்தில் தென் கொரியா
முழுக்க முழுக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நூரி விண்வெளி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தென் கொரியாவின் நூரி விண்வெளி ராக்கெட் தனது முதல் பரிசோதனையில் தோல்வியை தழுவிய நிலையில், செவ்வாய்கிழமையான இன்று மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது முயற்சியில் தென் கொரியாவின் நூரி விண்வெளி ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது என அந்த நாட்டின் அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் கோஹியுங் பகுதியில் இருந்து மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட 200 டன் திரவ எரிபொருள் நூரி ராக்கெட், திட்டமிட்டபடி விண்ணில் பயணித்து வருவதாக விண்வெளி நிலையத்தின் வர்ணனையாளர் தெரிவித்துள்ளார்.
South Korea successfully launched and put its homegrown space rocket into orbit Tuesday, becoming the seventh nation capable of launching practical satellites using a self-developed propulsion system. https://t.co/5Q4kFkaMyX pic.twitter.com/al4ozNbxZB
— ABC News (@ABC) June 21, 2022
தென் கொரியாவின் இந்த வெற்றிக்கரமான விண்வெளி ராக்கெட் ஏவுதலுக்கு முன்னதாக , கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அதாவது கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன்னதாக, விண்வெளிக்கு முதல் முயற்சியாக ஏவப்பட்ட நூரியின் விண்வெளி ராக்கெட், சுமார் 700கிலோமீட்டர் வரை பயணம் செய்து, இருப்பினும் போலி செயற்கைக்கோளை நீள்வட்ட பாதைக்குள் நிலைநிறுத்துவதற்கு சற்று முன்னதாக ராக்கெட் விண்ணில் செயல்படாமல் நின்றது.
இதனைத் தொடர்ந்து நூர்யின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் செவ்வாய்கிழமையான இன்று மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது முயற்சியில் நூர் விண்வெளி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது, இதில் நூரி ராக்கெட் செயல்திறன் சரிபார்ப்பு செயற்கைக்கோளை மற்றும் ஆராய்ச்சி காரணங்களுக்காக நான்கு உள்ளூர் பல்கலைக்கழகங்களால் வடிவமைக்கப்பட்ட நான்கு கியூப் செயற்கைக்கோள்களை சுமந்து சென்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூரி ராக்கெட் 2 டிரில்லியன் வோன் ($1.5 பில்லியன்) செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 200 டன் எடையும் 47.2 மீட்டர் (155 அடி) நீளமும் கொண்டது, மொத்தம் ஆறு திரவ எரிபொருள் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கூடுதல் செய்திகளுக்கு: கடலில் முழ்கிய ரஷ்ய கப்பல்...மேற்கத்திய ஆயுதங்களின் முதல் வெற்றி: பிரித்தானிய உளவுத்துறை தகவல்
ஆசியாவில், சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அனைத்தும் மேம்பட்ட விண்வெளி திட்டங்களைக் கொண்டுள்ளன, மேலும் தெற்கின் அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடான வட கொரியா, தனது சொந்த செயற்கைக்கோள் ஏவுதல் திறன் கொண்ட நாடுகளின் கிளப்பில் மிக சமீபத்தில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.