கவனத்தை ஈர்க்கும் மூக்கை மட்டும் மறைக்கும் புதுவகை மாஸ்க்
தென் கொரியாவில் ஆத்மன் என்ற நிறுவனம் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசத்தை வெளிட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிவதை அனைத்து நாடுகளும் முன்னெடுத்து வருகிறது. மேலும் முகக்கவசம் கட்டாயம் என பல்வேறு நாடுகளும் அறிவித்த பின்னர் N95s, KN95s, மற்றும் Surgical என பல்வேறு வகையான முகக்கவசங்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் தென் கொரியாவில் ஆத்மன் என்ற நிறுவனம் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசத்தை அறிமுக படுத்தியுள்ளது. இரண்டு அடுக்குகளாக இருக்கும் இந்த முகக்கவசத்தில், மேல் அடுக்கு சாதாரண வழக்கமான முகக்கவச அமைப்பிலும், மேல் அடுக்கை நீக்கிய பின் உள்ளே உள்ள இரண்டாவது அடுக்கு மூக்கு பகுதியை மட்டும் மறைக்கும் விதமாக அமைந்துள்ளது.
இதை தண்ணீர் பருகும் போதும், உணவு அருந்தும் போதும் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் 10 பெட்டிகளின் விலை 9800 வாங்குகள் என ஆன் லைன் வர்த்தக நிறுவனமான Coupang விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழக நிறுவனத்தில் தொற்றுநோயியல் தலைவர் Catherine Bennett தெரிவிக்கையில் இந்த மூக்கை மட்டும் மறைக்கும் யோசனை மிகவும் விசித்திரமான யோசனை எனவும், ஆனால் ஒன்றும் அணியாமல் இருப்பதற்கு இது பரவாயில்லை என தெரிவித்துள்ளார்.