இரவோடு இரவாக... தென் கொரியாவில் திடீரென்று அவசரநிலை பிரகடனம்: ஜனாதிபதி யூ அறிவிப்பு
தென் கொரியாவில் தற்போது அவசர அவசரமாக இராணுவ சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்துள்ளதாக ஜனாதிபதி யூன் சுக் யோல் அறிவித்துள்ளார்.
கிளர்ச்சியை முறியடிக்கவே
கம்யூனிச சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறி அவசர நிலையை அவர் பிரகடனம் செய்துள்ளார். மட்டுமின்றி, வடகொரியாவின் கிம் ஜோங் உன்னால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் கிளர்ச்சியை முறியடிக்கவே இந்த நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தலைநகர் சியோல் உட்பட பல நகரங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் சியோலில் உள்ள தேசிய நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே மனிதக் கேடயம் அமைக்க முயற்சிக்கும் மக்கள் மீது இராணுவத்தினர் தீ தூவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தை கைப்பற்றும் வகையில் முயற்சி மேற்கொண்ட இராணுவத்தின் நடவடிக்கையை திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்துள்ளனர். அப்போது நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் ஹெலிகொப்டர் தரையிறங்கியதை பார்த்ததால் பொதுமக்களிடையே பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டது.
(4/11) The army deployed armored vehicles and military helicopters to the streets of Seoul, while small groups of protesters were seen scuffling with police outside the National Assembly Proceeding Hall parliament building, shouting “End martial law!” pic.twitter.com/qcrMoabepn
— Sputnik (@SputnikInt) December 3, 2024
சாலைகளில் இராணுவ டாங்கிகள் காணப்பட்டன. இராணுவ சட்டத்திற்கு எதிராக மக்கள் முழக்கமிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் திரண்டிருந்த கூட்டத்தின் மீது இராணுவம் மற்றும் ஆயுதம் ஏந்திய பொலிசார் துப்பாக்கிகளால் குறிவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு சபாநாயகர் வூ வோன்-சிக் இராணுவச் சட்டத்தை நீக்கக் கோரும் பிரேரணையை சமர்ப்பித்தார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 300 பேரில் 190 பேர் கலந்து கொண்ட நிலையில் அவரது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனையடுத்து ஜனாதிபதி யூனின் ஆட்சி முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.
இந்த நிலையில், சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாக்க இராணுவ ஆட்சியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஜனாதிபதி உலகையே திகைக்க வைத்தார்.
அரசியல் நடவடிக்கைகள்
மட்டுமின்றி, வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜங்-உன்னை ஆதரிக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அச்சுறுத்தலை இராணுவச் சட்டம் முறியடிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த நடவடிக்கையை தடுப்பதாக உறுதியளித்தனர். சாதாரண மனித உரிமைகள் இராணுவச் சட்டத்தின் கீழ் இடைநிறுத்தப்படலாம், இதில் தேசிய அவசரநிலைகளின் போது இராணுவம் பாதுகாப்பைப் பராமரிக்கிறது.
தென் கொரியாவில் தற்போது அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இராணுவ சட்டத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மேலும், இராணுவச் சட்டத்தை அறிவிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கையைத் தடுக்க அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. இதனிடையே, அரசியல் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்குமாறு தென் கொரியாவில் உள்ள பிரித்தானிய மக்களுக்கு இங்கிலாந்து அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |