இனிமேல் மாஸ்க் கிடையாது! கோஸ்க் அறிமுகம்
கொரோனா வைரசிலிருந்து தப்பிக்க தென் கொரியாவில் வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் “கோஸ்க்” அறிமுகமாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாலிருந்து பரவ தொடங்கிய கொரோனா, இன்னும் குறைந்தபாடில்லை.
காமா, டெல்டா, ஒமைக்ரான் என இதன் மாறுபாடுகள் தொடர்ந்து உலக நாடுகளில் பரவிய வண்ணம் உள்ளன.
இந்த வைரசிலிருந்து நம்மை முழுவதுமாக காப்பது முகக்கவசமும், தடுப்பூசியும் தான் என்று மருத்துவ வல்லுனர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மாஸ்க்-கு பதிலாக, தென் கொரியாவில் மூக்கை மட்டும் மறைக்கும் “கோஸ்க்”கை அறிமுகம் செய்துள்ளனர்.
கொரிய மொழியில் கோ என்றால் மூக்கை குறிக்கும், அதனால் இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர்.
மூக்கின் வழியாகவே கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த கோஸ்க் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.