வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு தென்கொரியா பதிலடி!
தென்கொரியா தனது சொந்த பீரங்கிகளை இயக்குவதன் பதற்றத்தை அதிகரிப்பதாக வடகொரியா குற்றம்சாட்டியது
இரண்டு வாரங்களில் வடகொரியா 7க்கும் அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது
தென்கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை தொடங்கியுள்ளது.
அமெரிக்காவுடன் கொரிய எல்லையில் தென்கொரியா ஒன்றிணைந்து பயிற்சியில் ஈடுபட்டது. இந்த கூட்டுப்பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஏவுகணையை செலுத்தி வடகொரியா அச்சுறுத்தியது.
கடந்த இரண்டு வாரங்களாக வடகொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரிய தற்போது வருடாந்திர ராணுவ ஒத்திகையை பயிற்சியை தொடங்கியுள்ளது.
AFPPix
கடந்த வாரம் வடகொரியா ஏவுகணையை ஏவியதுடன், 500 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை சுட்டு பதற்றத்தை உண்டாக்கியது. மேலும், கடல் எல்லைக்கு அருகே ஏராளமான போர் விமானங்களை பறக்கவிட்டதால் பதற்றம் அதிகரித்தது.
AP
AFP