நாட்டையே உலுக்கிய வழக்கு: 7 வயது மாணவியை கொன்ற ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை
தென் கொரியாவில் வகுப்பறையிலேயே 7 வயது மாணவியை கொலை செய்த ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவி கொலை
தென் கொரியாவின் டேஜியோனில் உள்ள பாடசாலை ஒன்றில், கடந்த பிப்ரவரி மாதம் கிம் ஹா-நியூல் (7) என்ற மாணவி கொலை செய்யப்பட்டார்.
அவரது ஆசிரியை மியோங் ஜெய்-வான் (48) வகுப்பறையில் வைத்து குறித்த மாணவியை கொலை செய்தது நாட்டையே உலுக்கியது.
இந்த வழக்கில் கொடூரமான குற்றம் என கூறி, வழக்கறிஞர்கள் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று செப்டம்பர் மாதம் கூறினர்.
ஆயுள் தண்டனை
பாதிக்கப்பட்டவரின் பெற்றோரின் கடுமையான தண்டனைக்கான வேண்டுகோளையும் அவர்கள் மேற்கோள் காட்டினர்.
இந்த நிலையில், மியோங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மீண்டும் குற்றம் செய்வதற்கான ஆபத்து அதிகமாக இருந்தாலும், பிரதிவாதி தூக்கிலிடப்பட வேண்டும் என்று முடிவு செய்வது கடினம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |