வடகொரியாவின் எதிரி நாடு பூமியில் இருந்து முதலாவதாக காணாமல் போகுமாம்! அதிர வைத்த காரணம்
தென் கொரியா விரைவில் பூமியில் இருந்து காணாமல் போகும் என்ற நிபுணர்களின் கணிப்பு வெளியாகியுள்ளது.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு
நவீனமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் வேகமாக பயணிக்கும் தென் கொரியா, தற்போது கடுமையான மக்கள் நெருக்கடியை எதிர்கொள்கிறது.
ஆனால், நாட்டின் பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. 1960களில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த தென்கொரிய அரசு குடும்பக் கட்டுப்பாடு கொள்கையை அறிமுகப்படுத்தியது.
அதன் காரணமாக பெண்கள் அதிகளவில் கருவுறுதல் கட்டுப்பாட்டுக்கு வந்தது. முன்னர் ஒரு பெண்ணுக்கு 6 குழந்தைகள் என கருவுறுதல் விகிதம் இருந்தது.
உலகளவில் கருவுறுதல் விகிதம்
இந்த நிலையில் மக்கள் தொகை பெருக்கம் குறைந்து வருவதால், உலகளவில் கருவுறுதல் விகிதம் மிகக்குறைந்த அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் தென்கொரிய மக்கள் தொகை இந்நூற்றாண்டின் இறுதியில் மூன்றில் இரண்டு பங்காக சுருங்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அந்நாட்டின் மக்கள்தொகை 52 மில்லியனாக உள்ளது. இந்த நிலையே தொடர்ந்தால், நூற்றாண்டின் இறுதியில் 17 மில்லியன் அல்லது 14 மில்லியனாக மக்கள் தொகை குறையும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கொள்கைகளை அறிமுகப்படுத்திய அரசு
இதன் காரணமாக பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல கொள்கைகளை அறிமுகப்படுத்தியள்ளது தென்கொரிய அரசு.
வரிச் சலுகைகள், மானியத்துடன் கூடிய குழந்தைப் பராமரிப்பு மற்றும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்களுக்கான ராணுவ சேவை ஆகியவை இந்த கொள்கைகளில் அடங்கும்.
பல தென் கொரிய பெண்கள் குடும்பங்களை தொடங்குவதை விட தொழிலைத் தெரிவு செய்கிறார்களாம். நகர்ப்புறங்களில் இது அதிகமாக இருப்பதால் அரசின் நடவடிக்கைகளால் மாற்றங்கள் நிகழவில்லை.
இதற்கு சான்றாக 2024யில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என தெரியவந்தது.
இவ்வாறாக பிறப்பு விகிதம் குறைவதால் தென்கொரிய நாடு முதலாவதாக பூமியிலிருந்து காணாமல் போகும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |