ட்ரம்பின் வரி விதிப்பு பயந்து அமெரிக்கா விரைந்த ஆசிய நாடொன்றின் அமைச்சர்
புதிய ட்ரம்ப் நிர்வாகத்தின் எஃகு வரிகளிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி தென் கொரியாவின் தொழில்துறை அமைச்சர் அமெரிக்காவுக்கு விரைந்துள்ளார்.
ஒத்துழைப்பை வலுப்படுத்த
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் அவர் அமெரிக்காவில் தங்கியிருந்து, சாதகமான முடிவுக்கு முயற்சி மேற்கொள்வார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் எரிசக்தி மற்றும் கப்பல் கட்டுமானத்தில் இரு நாடுகளுக்குமான ஒத்துழைப்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ள அலுமினியம் மற்றும் எஃகு ஏற்றுமதி வரிகளிலிருந்து விலக்கு கோரி ஏற்கனவே தென் கொரியாவின் வர்த்தக துணை அமைச்சர் Park Jong-won அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே தற்போது தென் கொரியாவின் தொழில்துறை அமைச்சர் Ahn Duk-geun அமெரிக்கா புறப்படவிருக்கிறார். அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரிகளைச் சந்தித்து, கப்பல் கட்டுமானம் மற்றும் எரிசக்தியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆன் விவாதிப்பார்.
வர்த்தக கூட்டாளிகள்
அத்துடன் அமெரிக்க அரசாங்கத்தில் முதன்மையான சில நபர்களையும் அமைச்சர் ஆன் சந்திக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்றதன் பின்னர் எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு 25 சதவிகித வரிகளை அறிவித்த நிலையில், தென் கொரியா போன்ற வர்த்தகத்தை சார்ந்திருக்கும் பொருளாதாரத்திற்கு உலகளாவிய வர்த்தகப் போரின் அபாயங்கள் ஆபத்தான முறையில் உண்மையானதாகிவிட்டன.
மட்டுமின்றி ஏப்ரல் முதல் அமெரிக்காவுடனான வர்த்தக கூட்டாளிகள் மீதான பரஸ்பர வரி விதிப்பும் அமுலுக்கு வரும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
16 மாத கால தொடர்ச்சியான வளர்ச்சிப் பயணத்திற்குப் பிறகு, ஜனவரி மாதத்தில் தென் கொரியாவின் ஏற்றுமதி முதல் முறையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |