MRI ஸ்கேன் எடுக்கும்போது நடந்த பயங்கர சம்பவம்! கவனக்குறைவால் பலியான நோயாளி.. எச்சரிக்கை செய்தி!

South Korea Man Dead MRI Scan MRI Machine Patient Killed
By Ragavan Oct 19, 2021 12:35 PM GMT
Report

தென்கொரியாவில் நோயாளி ஒருவர் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து கொண்டிருந்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.

பெயர் வெளியிடப்படாத அந்த 60 வயதான நோயாளி, வியாழக்கிழமை தென்கொரியாவின் தெற்கு நகரமான கிம்ஹேயில் உள்ள மருத்துவமனையில் எம்ஆர்ஐ வார்டில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் கூற்றுப்படி, அந்த நபர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் அவர், எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து கொண்டிருந்தபோது, ​​அந்த இயந்திரத்தின் வலுவான காந்த சக்தியால் அருகில் இருந்த 60 கிலோ ஆக்ஸிஜன் சிலிண்டரை ஈர்த்துள்ளது.

அப்போது அந்த சிலிண்டர் பயங்கர வேகத்தில் அவரது தலையில் மோதி அடிபட்டதால், அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏன் எம்ஆர்ஐ அறைக்குள் கொண்டு வரப்பட்டது என்பதை பொலிஸார் ஆராய்ந்தனர்.

MRI ஸ்கேன் எடுக்கும்போது நடந்த பயங்கர சம்பவம்! கவனக்குறைவால் பலியான நோயாளி.. எச்சரிக்கை செய்தி! | South Korean Patient Dies In Mri Scan Machine

அதிகாரிகளின் கூற்றுப்படி, வலுவான காந்த சக்தியால் பொதுவாக அதைச் சுற்றி உலோகப் பொருள்கள் எதுவும் வைக்கப்படுவதில்லை. மருத்துவமனைக்கும் இது பற்றி தெரியும், ஆனால் அந்த நேரத்தில் நோயாளி ஆபத்தான நிலையில் இருந்தார். அதே சமயம், அந்த எம்ஆர்ஐ அறைக்குள் உள்ளமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் விநியோக அமைப்பு செயலிழந்த காரணத்தினால், ஆக்ஸிஜன் சிலிண்டரை நோயாளியுடன் எடுத்துச் செல்லபட்டுள்ளது என்று விளக்கினர்.

எம்ஆர்ஐ ஸ்கேனர்கள், அதன் காந்தப்புலங்கள் பூமியை விட 60,000 மடங்கு வலிமையானவை என்று கூறப்படுகிறது. அந்த இயந்திரம் உலோகப் பொருட்களை ஈர்க்கின்றன மற்றும் அவை காற்றில் பறக்க காரணமாகின்றன.

2018-ல் இதே போன்ற ஒரு துயர சம்பவம் இந்தியாவின் மும்பை நகரத்தில் நடந்தது, அங்கு நாயர் மருத்துவமனையில் தனது மாமியாரை பார்க்க வந்த 32 வயது நபர் அவர் எடுத்து வந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் எம்ஆர்ஐ துளைக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

அறையில் உள்ள மெட்டல் டிடெக்டர் சரியாக வேலை செய்யவில்லை என்றும், விபத்து நடந்தபோது மருத்துவமனை ஊழியர் தொலைபேசியில் இருந்தார் என்றும் பின்னர் தெரிவிக்கப்பட்டது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US