ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்ட பொலிசார்... நெருங்க விடாமல் பாதுகாப்பு அரண் அமைத்த ராணுவம்
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்யும் பொருட்டு கலவரத் தடுப்பு பொலிசார் ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த
இதில் அதிர்ச்சி திருப்பமாக ஜனாதிபதிக்கு ஆதரவாக பொலிசாருக்கு எதிராக இராணுவம் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூன் சுக் யோல் கடந்த மாதம் இராணுவச் சட்டத்தை அறிவித்து தென் கொரியாவை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த நிலையில், நாட்டின் பாராளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அத்துடன் அவர் மீது குற்றவியல் விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வந்த அவர் மீது நீதிமன்றம் கைதாணை வெளியிட்டது.
இந்த நிலையில் கலவரத் தடுப்பு பொலிசார் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை அதிகாரிகள் குழு கைதாணையை செயல்படுத்தும் விதமாக அவரது சியோல் இல்லத்திற்குள் நுழைந்துள்ளனர்.
இப்படியான சம்பவத்தை எதிர்பார்த்திருந்த யூன் சுக் யோல், இராணுவத்தை பயன்படுத்தி, தமக்கு பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 3,000 பொலிசார் மற்றும் அதிகாரிகள் தற்போது யூன் சுக் யோல் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி கைது செய்யப்படுவது தென் கொரிய அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்று. தம்மீதான கைதாணை என்பது சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ள யூன், சட்டத்தின் அடிப்படையில் அதை எதிர்கொள்ள தாம் தயார் என்றும் கொந்தளித்துள்ளார்.
பகல் 7 மணி முதல் ஜனாதிபதியை கைது செய்யும் பொருட்டு அதிகாரிகள் அவரது குடியிருப்பு வளாகத்தில் நுழைந்துள்ளனர். ஆனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் அளித்த அழுத்தம்
டிசம்பர் 3ம் திகதி நடந்த அதிகார அபகரிப்பு குறித்து தென் கொரிய நாடாளுமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்தின் கதவுகளை உடைக்கவும், தேவை எனில் துப்பாக்கிச் சூடு நடத்தவும் தமது இராணுவ தளபதிக்கு அன்றைய நாள் அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
தென் கொரிய மக்களை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த இராணுவச் சட்டம் என்பது வெறும் 6 மணி நேரம் மட்டுமே அமுலில் இருந்தது. அதற்குள் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மக்கள் அளித்த அழுத்தம் காரணமாக இராணுவச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஆனால் துணிச்சலான எம்.பி.க்கள் மற்றும் பணியாளர்கள் ஒன்று திரண்டு, நாடளுமன்றத்தை இராணுவம் கைப்பற்றாமல் இருக்க போராடினர். அடுத்த சில மணி நேரத்தில் 190 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி யூனின் இராணுவச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்து நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர் டிசம்பர் 14 அன்று ஒரு பெரும் வாக்கெடுப்பில் பதவி நீக்கம் செய்யப்பட்டார், அதில் அவரது சொந்த கட்சி உறுப்பினர்களும் அதற்கு வாக்களித்தனர். பிரதமர் ஹான் டக்-சூ டிசம்பர் 14 அன்று நாட்டின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் - ஆனால் அவர் டிசம்பர் 27 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |