வெள்ளை மாளிகையில் அமெரிக்க பாடல் பாடி அசத்திய தென் கொரிய ஜனாதிபதி: வியந்து போன ஜோ பைடன்
அமெரிக்கா வந்திருக்கும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் அமெரிக்க பாடல் பாடி அசத்தியுள்ளார்.
அமெரிக்கா விஜயம்
தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல்(Yoon Suk Yeol), அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற காலா ஸ்டேட் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
@ap
தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எழுபதாண்டு கால நட்பின் நீட்சியாக, வெள்ளை மாளிகையில் காலா ஸ்டேட் விருந்திற்கு யூன் சுக் இயோல் அழைக்கப்பட்டிருந்தார்.
#borahae! ????
— ??Curtis S. Chin (@CurtisSChin) April 27, 2023
I do ? this. No, not #BTS #BTSV #KimTaehyung. But South #Korea’s President Yoon Suk Yeol. #Yoon steals the show at Wednesday’s White House state dinner with a rendition of his #favoritesong, "American Pie." pic.twitter.com/gB2ufGXXVO ht @jeffmason1 #AmericanPie
விழாவில் கலந்து கொண்ட அவர் அமெரிக்காவில் பிரபலமான “American pie" பாடலை பாடியுள்ளார். மிகவும் நேர்த்தியாக ஆங்கில பிழையில்லாமல் அவர் பாடியதை கேட்டு அவையிலிருந்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளார்.
பாடல் பாடி அசத்திய யூன்
அவர் பாடலை பாடி முடித்ததுமே அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி பாராட்டு தெரிவித்துள்ளனர், ஜோ பைடன் உற்சாகத்தில் யூன் சுக் இயோலை பாராட்டியுள்ளார்.
@ap
தென் கொரிய ஜனாதிபதி யூன் கரோக்கியின் ரசிகர் மட்டுமல்லாது அமெரிக்காவின் பாடல்களை விரும்பி கேட்பார் என தெரிய வந்துள்ளது.
@ap
இந்நிலையில் விருந்துக்கு முன்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை வடகொரியா சந்திக்குமென, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.