மாமிச அரிசி தெரியுமா? சாதாரண அரிசியை விட 8 சதவீதம் புரதம், 7 சதவீதம் கொழுப்பு அதிகம்!
விஞ்ஞானிகள் புரதமும் கொழுப்பும் அதிகமாக கொண்ட மாமிச அரிசியை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
உணவின் மூலம் அதிக புரதத்தைப் பெற விரும்புவோருக்கு இது நல்ல செய்தி.
தென் கொரியாவில் உள்ள Yonsei பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய வகை கலப்பின (hybrid food) அசைவ அரிசியை (meaty rice) உருவாக்கியுள்ளனர்.
இறைச்சி (Beef) மற்றும் கொழுப்புத் துகள்கள் அடங்கிய இந்த அரிசி ஆய்வகத்தில் உருவாக்கப்படுகிறது.
இதற்காக முதலில் மீனில் இருந்து எடுக்கப்படும் பசை போன்ற பொருளை அரிசியில் பூசுவார்கள்.
இதனால் இறைச்சித் துகள்கள் அதில் ஒட்டிக்கொள்ளும். பின்னர் அவை 11 நாட்களுக்கு ஒரு Petri dish பாத்திரத்தில் பதப்படுத்தப்படும்.
இதில் சாதாரண அரிசியை விட 8 சதவீதம் அதிக புரதமும், 7 சதவீதம் அதிக கொழுப்பும் உள்ளது.
இவை மலிவு விலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Matter பத்திரிகையின் கட்டுரையின் படி, இந்த மாமிச அரிசி வறட்சி, இராணுவ உணவு மற்றும் விண்வெளி உணவாக பயன்படுத்தப்படலாம் என நம்புகின்றனர் விஞ்ஞானிகள்.
ஆய்வகங்களில் வளர்க்கப்படும் இந்த அரிசி, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதோடு, இறைச்சிக்காக கால்நடைகளை வளர்க்கும் தேவையை நீக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதன் மூலம் இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என கூறப்படுகிறது. ஆனால் இந்த அரிசியை எந்த அளவுக்கு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Hybrid Rice, Hybrid food, Meaty Rice, Beef Rice, Protien Rich Hybrid food, Protien Rice, Pink Rice