தேங்காய் ஓடுகளை கோடிக்கணக்கில் பணமாக மாற்றும் சாதனைப் பெண்., யார் இந்த மரியா குரியகோஸ்?
ஒவ்வொருவருக்கும் சிறுவயதில் சில கனவுகள் இருக்கும். அவர்கள் பெரியவர்களாகும் போது அதைச் செய்ய முயற்சிக்கிறார்கள்.
சிலர் தங்கள் கனவை அதிர்ஷ்டத்தின் மூலம் நிறைவு செய்கிறார்கள். சிலருக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இருக்காது. அவர்கள் வேறு வழியை பார்க்கிறார்கள்.
ஆனால் இன்னும் சிலர் அதிர்ஷ்டத்தை நம்பாமல் தங்கள் விதியை தானே எழுதுகிறார்கள். மரியா குரியாகோஸ் இதற்கு சிறந்த உதாரணம்.
மரியா குரியகோஸ் (Maria Kuriakose) சிறுவயதில் தனது மாநிலமான கேரளாவுக்கு ஏதாவது செய்ய விரும்பினார். ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை.
என்ன செய்வது, என்ன செய்வது என்ற கேள்வி அவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்தது. இறுதியில், அவர் தனது கனவுகளை நனவாக்க கடுமையாக உழைத்து வெற்றி பெற்றுள்ளார்.
Photos: Thenga Coco@Facebook
மரியா குரியாகோஸின் பயணம் எளிதானது அல்ல. தன் மாநிலத்தில் ஒரு தேங்காய் தொழிற்சாலையைப் பார்த்ததும் மரியாவின் பாதை மாறியது.
தேங்காய் துருவிய பிறகு மீதி இருக்கும் தேங்காய் ஓடுகள் குவிந்து கிடந்தன. அவை பொதுவாக அடுப்பெரிக்கவே பயன்படுத்தப்படுகின்றன.
தமிழில் கொட்டாங்குச்சி அல்லது சிரட்டை என்றும் அழைக்கப்படும் இந்தத் தேங்காய் ஓடுகளை வைத்து ஏதாவது செய்யலாம்,அவற்றை பணமாக மாற்றலாம் என்று நினைத்தார்.
Photos: Thenga Coco@Facebook
மரியா கேரளாவின் திருச்சூரில் பிறந்தார். மரியாவின் தந்தை குரியாகோஸ் மெக்கானிக்கல் இன்ஜினியர் மற்றும் தாய் ஜாலி குரியாகோஸ் இல்லத்தரசி.
28 வயதான மரியா, மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். பின்னர் Spain சென்று 2017ல் MBA முடித்தார்.
எம்பிஏ முடித்துவிட்டு மீண்டும் மும்பைக்கு வந்த மரியா, அங்குள்ள ஒரு ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் மரியாவிற்கு இந்த வேலையைச் செய்ய விரும்பமில்லை.
மரியா 2019-இல் கேரளா திரும்பினார். பின்னர் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைக்கு சென்றார். அங்கு கொட்டிக்கிடந்த தேங்காய் ஓடுகளைப் பார்த்து, அவற்றை என்ன செய்யலாம் என்று ஆய்வு செய்தார்.
தேங்காய் ஓடுகளில் ஒரு ஆக்கப்பூர்வமான பொருளை உருவாக்க நினைத்த மரியா அதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
Photos: Thenga Coco@Facebook
இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் கேரளா முன்னணியில் உள்ளது. இந்த அடிப்படையில் மரியா தனது ஸ்டார்ட்அப்பை 2020-இல் தொடங்கினார். அவர் தனது பிராண்டிற்கு Thenga Coco என்று பெயரிட்டார்.
தொழிலைத் தொடங்கினாலும், கோவிட்-19 காரணமாக சில சிக்கல்களை எதிர்கொண்டார். ஆனால் மரியா பின்வாங்கவில்லை. விரைவில் அவர்களின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கின.
இப்போது இவரது நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1 கோடி வியாபாரம் செய்து வருகிறது.
Thenga Coco என்ன தயாரிக்கிறது?
மரியா Thenga Coco நிறுவனம் மூலம் பல பொருட்களைத் தயாரித்து வருகிறார். இன்று, Thenga Coco தேங்காய் ஓடுகளில் இருந்து கோப்பைகள், கிண்ணங்கள், கத்தி, கத்தரிக்கோல், மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள், சமையல் கரண்டிகள் உட்பட 23 அழகான பொருட்களைத் தயாரிக்கிறது.
Photos: Thenga Coco@Facebook
மரியாவின் தந்தை ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் மற்றும் Thenga Coco-விற்கு இயந்திரங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்பதால், இயற்கைக்கு நெருக்கமான பொருட்களை பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தான் இந்த தேங்காய் சிரட்டை பொருட்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.
Photos: Thenga Coco@Facebook
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Thenga Coco brand, Thenga Coco products, Maria Kuriakose, Businesswomen, Coconut Shell, Kerala