லண்டன் சந்தையில் கத்திக்குத்து: தாக்குதல்தாரியை சிறை பிடித்த வியாபாரிகள்
லண்டன் சந்தையில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லண்டன் சந்தியில் கத்திக்குத்து
தெற்கு லண்டன் பகுதியில் உள்ள சந்தையில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன், 2 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை Walworth பகுதியின் கிழக்கு சாலை சந்தையில் நடைபெற்றுள்ளது.
வெளியான தகவல்களின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரும் வரை தாக்குதல்தாரியை வணிகர்கள் பிடித்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
மெட் பொலிஸார் வழங்கிய தகவலில், 3 பேர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், காயமடைந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
60 வயதுடைய நபர் கைது
இந்நிலையில் சம்பவ இடத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மனநலம் தொடர்பானது என்றும், பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடையது இல்லை என்றும் விளக்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |