டொனால்ட் டிரம்ப் என்னுடைய உயிரியல் தந்தை! வைரலாகும் பாகிஸ்தான் பெண்ணின் பழைய வீடியோ
டொனால்ட் டிரம்ப் தன்னுடைய தந்தை என பாகிஸ்தான் பெண் ஒருவர் பேசி இருக்கும் பழைய வீடியோ மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் பாகிஸ்தான் பெண்ணின் வீடியோ
2024ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, டிரம்ப் தன்னுடைய உயிரியல் தந்தை என பாகிஸ்தான் பெண் ஒருவர் பேசும் பழைய வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல் முதலில் இந்த வீடியோ 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் Siasat.pk என்ற கணக்கில் இருந்து பதிவிடப்பட்ட நிலையில், அப்போது இந்த வீடியோ போதுமான கவன ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

ஆனால் தற்போது ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, பல்வேறு சமூக ஊடக கணக்குகள் இந்த வீடியோவை மீண்டும் பரப்பி வருகின்றனர்.
Ghar Ke Kalesh என்ற கணக்கில் இருந்து மறு பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை கிட்டத்தட்ட 5.5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
பெண்ணின் உறுதியான கருத்து
அந்த வீடியோவில், தன்னை முஸ்லிம் மற்றும் பஞ்சாபி என்று மிகவும் தன்னம்பிக்கையுடன் உருது மொழியில் அந்த பெண் அறிமுகப்படுத்தி கொள்கிறார்.
Meet Donald Trump's daughter from Pakistan 😭
— Ghar Ke Kalesh (@gharkekalesh) November 7, 2024
pic.twitter.com/IebSWyB74X
இதையடுத்து தொடர்ந்து பேசிய அந்த பெண், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய உயிரியல் தந்தை என்று வெளிப்படுத்துகிறார்.
மேலும், டிரம்ப் தன்னுடைய தாயை பொறுப்பற்றவர் என்று ஒரு முறை நிராகரித்ததாகவும், அவரின் குழந்தை வளர்க்கும் திறனை சந்தேகித்ததாகவும் அந்த பெண் விவரித்துள்ளார்.
இந்நிலையில், மறுபகிர்வு செய்யப்படும் இந்த பழைய வீடியோக்கள் இணையத்தில் ஆர்வம் மற்றும் நகைச்சுவை உணர்வுகளை தூண்டி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |